. September 19, 2019 – Jaffna Journal

திலீபனின் நினைவு தூபி புனரமைப்பு – யாழ். மாநகரசபையில் தீர்மானம்

தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியைப் புனரமைப்பதற்கு யாழ். மாநகரசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகர சபையின் மாதாந்த அமர்வின் ஒத்திவைப்பு அமர்வு, இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர், தியாக தீபம் திலீபனின்... Read more »

யாழில் பாடசாலை அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை – கல்வி அமைச்சு

யாழிலுள்ள பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பதற்கு பணம் கோரினார்கள் எனும் குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்கள் என நேற்றைய தினம் மாலை... Read more »

கூட்டமைப்பிடம் ஆதரவு கோரும் அரசியல் தலைவர்களுக்கு சி.வி.கே. முக்கிய அறிவுறுத்தல்!

தமிழர்களுக்கு தீர்வு வழங்குவோம் என கூறி கூட்டமைப்பிடம் ஆதரவு கோருபவர்கள், எந்த விடயத்தில் எவ்வாறான தீர்வுகளை வழங்குவார்களென பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக... Read more »

அரியாலையில் வெடிபொருட்கள் மீட்பு!!

அரியாலை அருளம்பலம் வீதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட துப்பரவு நடவடிக்கையின் போதே இன்று (வியாழக்கிழமை) காலை இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது கிரனைட் மற்றும் இரண்டு மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்... Read more »

விடுதலைப் புலிகளால் நடப்பட்ட தேக்க மரங்களைத் தறிக்கிறது வன வளத் திணைக்களம்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளால் நடப்பட்ட தேக்கம் மரங்கள் வனவளத் திணைக்களத்தால் தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் பயன் தரும் தேக்கம் மரங்கள் நடப்பட்டன. அவை வனவளத் திணைக்களத்தினரால் கனரக... Read more »

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி!!

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைப்பெறும் என்றும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று மாலை தெரிவித்திருந்தார். இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர்... Read more »

செயற்கை கை உருவாக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு இளைஞன்!

முல்லைத்தீவு- மல்லாவியைச் சோ்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவர் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். மல்லாவியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதனின் மகனான துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். 2009 ஜனவரி 20ஆம் திகதி சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார்கோவில்... Read more »