. September 11, 2019 – Jaffna Journal

யாழ்.பல்கலை. நியமனத்தில் புறக்கணிக்கப்பட்டோர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆள்சேர்ப்பில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அரசியல்வாதிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் இன்று காலை முதல் சுழற்சி முறையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுவருகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்பட நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் குறிப்பிட்ட... Read more »

வவுனியா வைத்தியசாலைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் – பொலிஸார் தீவிர தேடுதல்!!

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வவுனியா பொலிஸாருக்கு இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு மோப்பநாய் சகிதம் சென்ற வவுனியா பொலிஸார், தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இதனால்... Read more »

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போருக்கான முக்கிய தகவல்!

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது கருவிழி ஸ்கேன் அடையாளம் காண்பதற்கான முறைமை அறிமுகம் செய்யப்படவுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் குடிவரவு... Read more »

காணாமலாக்கப்பட்டோர் மரணிக்கவில்லை – மஹிந்த அணி

காணாமலாக்கப்பட்டோர் மரணிக்கவில்லை என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘காணாமலாக்கபட்டோர் என்று குறிப்பிடுபவர்கள் உண்மையில்... Read more »

யாழில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று யாழ்.சங்கிலியன் பூங்காவில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போது பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் குறித்த... Read more »