. September 6, 2019 – Jaffna Journal

பொது அமைப்புக்களுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!!

எழுக தமிழ் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. போர்க்குற்ற விசாரணையை நடாத்து, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய், வடக்கு- கிழக்கில் இராணுவ மயமாக்கலை... Read more »

கோதுமை மாவின் விலை அதிகரிப்புடன் பாண் விலையும் கூடியது

கோதுமை மாவின் விலையை இன்று முதல் பிறிமா நிறுவனம் அதிகரித்துள்ளது. இதன்படி கோதுமை மாவின் ஒரு கிலோவின் விலை 5.50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த அதிகரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு விடுத்துள்ளது. இதேவேளை, இன்று நள்ளிரவு முதல்... Read more »

வரதராஜ பெருமாளுக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்!

வவுனியாவில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளுக்கு எதிராக காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் இடம்பெற்றுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என வவுனுயாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வரதராஜப்பெருமாள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யாரும் உயிருடன் இல்லை!! கோட்டாவை ஆதரிப்பதே ஒரே வழி!!!- வரதராஜபெருமாள்

சர்வதேச விசாரணை என எதுவும் நடக்கப்போவதில்லை. தமிழர்கள் கோட்டாபயவை ஆதரிக்க வேண்டிய தேவையுள்ளது எனவும் வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், தமிழர் சமூக ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமாகிய வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியா விருந்தினர் விடுதி ஓன்றில் நேற்று... Read more »

பலாலி விமான நிலைய தொழில்வாய்ப்பில் வடக்கிற்கு முக்கியத்துவம் – அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உறுதி

பலாலி விமான நிலையத்துடன் தொடர்புபட்ட தொழில்வாய்ப்புக்களை வழங்கும் பொழுது வடமாகாணத்தில் உள்ளவர்களுக்கு கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். அத்துடன், பலாலியில் இருந்து இந்தியா வரையில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளை வழங்குவதில் உள்ளூர் நிறுவனங்களுக்கு... Read more »

கோண்டாவிலில் வீடு புகுந்து வாள்வெட்டுக் கும்பல் அடாவடி!!

கோண்டாவில் அன்னங்கை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது. கோண்டாவில் உடும்பிராய் மேற்கு வீட்டிற்குள்... Read more »

அரச வேலை பெற்றுத்தருவதாக இளம் பெண்களிடம் சேட்டை செய்த வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சிக்கினார்!!

அரச வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளம் பெண்களை அழைத்து தகாத முறையில் நடந்துகொண்ட அரசியல்வாதி சித்தன்கேணி இளைஞர்களிடம் கையும் மெய்யுமாக சிக்கிக்கொண்டார். வலி. மேற்கு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரே இவ்வாறு பிடிபட்டார். அவர் இளைஞர்களால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்தச்... Read more »

தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கும் யாழ். பல்கலை கல்விசாரா ஊழியர்கள்

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று வெள்ளிக்கிழமை(06) நண்பகல்-12 மணி முதல் அரைநாள் தொழிற்சங்கப் போராட்டத்தையும், கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்படி போராட்டங்களுக்கான அழைப்பினை விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் தவிர்ந்த சகல... Read more »