. September 5, 2019 – Jaffna Journal

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர் பலாலி விஜயம்!!

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று நேரில் ஆராய்ந்தார். அமைச்சர் தலைமையில் 80 பேர் கொண்ட குழுவினர் இதுதொடர்பில் ஆராய்ந்தனர். யாழ்ப்பாணம் பலாலி விமானத் தளம் பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தும்... Read more »

வடக்கு, கிழக்கில் பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது – தமிழ் மக்கள் பேரவை

வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ் மக்கள் பேரவை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த... Read more »

நல்லாட்சி அரசாங்கத்தின் பிளவே புதிய அரசியலமைப்பு முடங்க காரணம் – சுமந்திரன்

நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடங்குவதற்கு காரணமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த செவ்வியில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடக்கப்பட்டதற்கான காரணம் என்னவென கேள்வியெழுப்பப்பட்டது.... Read more »

சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் உறுதிமொழியையடுத்து சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட சுகாதாரத் தொண்டர்களுக்கு இன்று ஆளுநர் தலைமையில் நியமனங்கள் வழங்கப்படவிருந்தன. இந்நிலையில் சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்யுமாறு கோரி புறக்கணிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதனையடுத்து நேர்முகத்தேர்வுக்கு... Read more »

மாவை சேனாதிராஜாவை கண்டதும் தீ குளிக்க முயற்சி செய்த நபரால் பரபரப்பு!!

யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியுள்ளது. மேலும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தை... Read more »

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் இருவர் மீது வாள்வெட்டு

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச்... Read more »

முறிகண்டி விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் உயிரிழப்பு!

முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய ஆதரவாளர் என அறியப்படுகிறது. முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முறிகண்டி யாழ். பல்கலைக்கழக வளாகச் சந்தி அருகில நேற்று (புதன்கிழமை) மாலை... Read more »

கோட்டா தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பே காரணம் – கஜேந்திரன்

இறுதி யுத்தத்தின்போது தமிழர்களை இன அழிப்புச் செய்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்... Read more »