. August 2019 – Page 8 – Jaffna Journal

நல்லூரில் பதற்றம்!! – போலி இலக்கத்தகடுளை பொருத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் கைது!!

போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தியவாறும் தலைக்கவசத்துக்கு சலோ ரேப் ஒட்டி மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நல்லூர் ஆலய பின் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நண்பரை ஏற்றுவதற்கு வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.... Read more »

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் – கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!!

“வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் தாழ் அமுக்க நிலை ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் அடுத்த சில தினங்களுக்கு புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடல் பிரதேசம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிரதேசத்தல் காற்றின் வேகம்... Read more »

நல்லுாா் திருவிழாவிற்கு பாதுகாப்பு வழங்கப்படும் – பிரதமா் ரணில்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயம் மற்றும் மடு மாதா ஆலயம் ஆகியவற்றின் திருவிழாக்களை எந்த அச்சமும் இல்லாமல் நடாத்துமாறு பணித்திருக்கும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளாா். அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.... Read more »

இந்தியாவில் வாழும் அகதிகளை இலங்கைக்கு அழைத்து வர உதவுமாறு கோரிக்கை

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் திரு.சரத் டாஷ் (Mr.Sarat Dash) ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் விரிவாக... Read more »

பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனத்தால் மாணவி மரணம்?

முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. றோமன் கத்தேலிக்க பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த 12 வயதுடைய இ. லிந்துசியா (சீனு) என்ற மாணவி கடந்த மாதம்... Read more »

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்தும் குளவிகள் – வட்டுக்கோட்டையில் 50 பேர்வரை பாதிப்பு!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களில் குளவிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை துணவி – அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக மரம் ஒன்றில் கட்டியுள்ள குளவிக் கூடு கலைந்து 50 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்... Read more »

வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறையில் நடைபெற்றுள்ளது. வல்வெட்டித்துறை நகரத்தில் இந்நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர்மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும்... Read more »

சின்னப்பையன் நாமல் வரலாறு தெரியாமல் கதைக்கக்கூடாது: மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதும் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஐபக்சவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஐபக்ச வடக்கிற்கு வந்து கூறுவதானது உண்மைக்குப் புறம்பான குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவை என்பதுடன் உண்மைத் தன்மையோ நியாயமோ இல்லாத அவருடைய இந்தக் கருத்துக்களை... Read more »

யாழ் மாவட்டத்தில் 1,253 பட்டதாரி பயிலுனர்கள் நியமனம்

16 ஆயிரத்து 800 பட்டதாரிகளை பட்டதாரி பயிலுனர்களாக இணைக்கும் தேசியத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரத்து 253 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. 15 பிரதேச செயலர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட... Read more »

படுகொலை செய்யப்பட்ட சகாதேவன் நிலக்சனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இலங்கைப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனுமான ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12வது நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நேற்று (வியாழக்கிழமை) குறித்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.நீதிமன்ற... Read more »

வடக்கு இளைஞர்களே 2 மாதம் பொறுமையாக இருங்கள்: மகிந்தானந்த

நாட்டில் அமையவுள்ள எமது புதிய அரசாங்கத்தினால் வடக்கிலுள்ள இளைஞர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதற்கு இளைஞர்கள் அனைவரும் இரண்டு மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிசொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

சட்டத்தரணிகள் குருபரன், சுபாசினிக்கு சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து அச்சுறுத்தல்!!

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கே.குருபரன் மற்றும் சட்டத்தரணி எஸ்.சுபாசினி ஆகியோரை... Read more »

ஸ்மாட் லாம்ப் போல் அமைக்கத் தடை கோரி மனு – மாநகர சபைக்கு சார்பாக சுமந்திரன் முன்னிலையாகிறார்!!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவில் பிரதிவாதிகளான மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர சபை சார்பில்... Read more »

மதுபோதையில் ஏற்பட்ட முறுகல் இரட்டைக் கொலையில் முடிந்தது!!

கிளிநொச்சியில் தாயையும் மகனையும் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் அயல் வீட்டில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தாயையும் அவரது மகனையும் சந்தேகநபர் வெட்டிக் கொலை செய்தார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவருவதாவும் பொலிஸார்... Read more »

கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 13 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (வியாழக்கிழமை) முதல் அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். ஒருநாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபடாதிருக்கத் தீர்மானித்துள்ளனர். சம்பள முரண்பாடுகளை நீக்குதல், கிராம உத்தியோகத்தர்களுக்கான... Read more »

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை ஆட்சேபித்து மௌன பேரணி!

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் மற்றும் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை ஆட்சேபித்து மௌன பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி நாளை மறுதினம் காலை 09 மணியளவில் நல்லை ஆதின முன்றலில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இந்து அமைப்புக்கள் ஒன்றியத்தின் உப... Read more »

அரச பணியிலிருந்து கொண்டு இன்று நியமனம் பெற இருந்த 104 பட்டதாரிகள் சிக்கினர்!!

ஏற்கனவே அரச பணியிலிருந்துகொண்டு வேலையற்ற பட்டதாரிகளிற்கான நியமனத்தில் உள்வாங்கப்பட்ட 104 பேர் நேற்றுவரையில் இனம்கானப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே பணிபுரியும் தகவலை மறைத்து நியமனம் பெற முயற்சித்நமை கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வேலையில்லாப் பட்டதாரிகளிற்கான நியமனம் தற்போது வழங்கப்படும் நிலையில் இன்னமும் ஆயிரக்... Read more »