. August 8, 2019 – Jaffna Journal

உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் -சீ.வீ.கே.சிவஞானம்

வெளிவாரி பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். பட்டதாரி நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வெளிவாரி பட்டதாரிகள் இன்றையதினம் இலங்கை... Read more »

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்களுக்கான தெளிவுபடுத்தல் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் எதிர்வரும் 12 ஆம் திகதி (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. களுவாஞ்சிக்குடி சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட... Read more »

ஐ.தே.க. வுக்கு ஆதரவு கொடுத்தும் கூட்டமைப்பால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை – கோட்டா

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு கொடுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 2009... Read more »

காய்சலுக்காக பயண்படுத்தும் மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

தற்போதைய சூழ்நிலையில் காய்சலுக்காக அஸ்பிரின் மற்றும் பிற ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஸ்ரிறொயிட் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக்... Read more »

உள்வாரி பட்டதாரிகளுக்கு வேலை வழங்கிய பின்னரே வெளிவாரி பட்டதாரிகளுக்கு வாய்ப்பு – பிரதமர் ரணில்

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும்போது உள்வாரி பட்டதாரிகளுக்கு வேலைகளை வழங்கிய பின்னரே வெளிவாரி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எனினும், வேலைவாய்ப்பு வழங்கும் விடயத்தில் எந்தவிதமான பாரட்சமும் காட்டப்படவில்லையெனக் குறிப்பிட்ட அவர், வெளிவாரிப் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தொழிலொன்றில் இருந்துகொண்டே... Read more »

வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க இடமளிக்க மாட்டேன் – ரணில்

வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின்... Read more »

நல்லூர் திருவிழா: தமிழர் பண்பாட்டைப் பாதுகாக்குமாறு வலியுறுத்து

நல்லூர் ஆலயத் திருவிழா காலத்தில் தமிழ் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கலாசார உடைகளை பக்தர்கள் அனைவரும் அணிந்து வரவேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் எஸ்.நிஷாந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு... Read more »

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்களுக்குள் கைகலப்பு – நால்வர் காயம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே கடந்த திங்கட்கிழமை முரண்பாடு... Read more »

வடக்கில் 70 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகலிலும் இரவிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து... Read more »