. July 2019 – Jaffna Journal

வடக்குக்கான புகைரத சேவை 6 ஆக அதிகாிக்கப்படுகிறது!

யாழ்ப்பாணம்- கொழும்பு ரயில் சேவை ஆறாக அதிகரிக்கிறது. புதிதாக இரு சேவைகள்.யாழ்ப்பாணத்துக்கும்- கொழும்புக்கும் இடையில் தினமும் நடைபெறும் ரயில் சேவை நான்கிலிருந்து ஆறாக நாளை வியாழக்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்பிரகாரம் இரவு தபால் ரயில் சேவையில் நேரமாற்றம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள தரப்பினர் தெரிவித்தனர்.அதாவது... Read more »

கீாிமலை புனித பூமியை குப்பை மேடாக்க சதி..! வெளிநாட்டு கழிவுகளும் கொட்டப்படும் அபாயம்!!

வலிகாமம் வடக்கு கீாிமலை பகுதியில் சுன்னாம்பு கல் அகழப்பட்ட குழியில் குப்பைகளை கொட்டும் நடவடி க்கைக்கு கடுமையான எதிா்ப்பு காட்டப்பட்டுள்ளதுடன், கீாிமனையின் புனித தன்மையை சீரழிக்கும் செயற்பாடும் எதிா்கால அபிவிருத்தியை சிதைக்கும் செயற்பாடுமாகும். மேற்கண்டவாறு யாழ்.பல்கலைக்கழக திட்டமிடல் பிாிவு சிரேஸ்ட விாிவுரையாளா் செல்வராசா ரவீந்திரன்... Read more »

கிளிநொச்சியில் தாயும் மகனும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தாயும், மகனும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (30) செவ்வாய்க்கிழமை காலையில் அவர்களது இருவரும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர். 70 வயதான தாயும், 34 வயதுடைய மகனின் சடலமுமே வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன. கூரிய ஆயுதத்தால்... Read more »

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கூட்டமைப்பு ஆதரிக்காது ! – சுமந்திரன்

கூட்டு அரசு அமைக்கப்பட வேண்டும் என்றால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஏன் அமைச்சரவையை அதிகரிக்க வேண்டும் ? இருக்கின்ற அமைச்சுக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். “பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படும், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், தீர்மான வரைவை... Read more »

இந்தியத் துணைக் கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்ரெம்பர் முதல் பலாலி ஓடுதளம் செயற்படும்!!

பலாலி விமான நிலையம் இந்திய துணைக் கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்தார். பலாலி ஓடு தளத்தில் 70 பயணிகளை கொண்ட விமானங்களை கையாளக்கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட... Read more »

மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு கட்சி பேதங்களை மறந்து அனைவரும் அணிதிரளுங்கள் – தமிழ் மக்கள் பேரவை அறைகூவல்

செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை… தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி தமிழினத்தின் அவலத்தையும்... Read more »

வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கி (NCDB) ஆரம்பிக்க ஆளுநர் சுரேன் ராகவன் நடவடிக்கை

வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை (Northern Co-operative Development Bank -NCDB) ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையச்செய்ய வேண்டுமென்ற கௌரவ ஆளுநர் அவர்களின் தூரநோக்கிற்கமைய வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின்... Read more »

யாழ்ப்பாணம் வருகை தந்த நாமல் சா்வமத தலைவா்களுடன் சந்திப்பு!!

நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ஸ யாழ்.குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வழிபாடுகளையும், சா்வமத தலைவா்கள் சந்திப்பையும் மேற்கொண்டுள்ளாா். இன்று திங்கட்கிழமை காலை வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ச தலைமையிலான குழுவினர் மதத் தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மதத் தலைவர்களையும் சந்தித்து... Read more »

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய பொலிஸார்!

யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த நபர் கொடிகாமம் பகுதியில் மது போதையில் தொடருந்து தண்டவாளத்தில் படுத்திருந்த காரணத்தினாலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனது உயிரை மாய்த்து கொள்வதற்காக அவர் தண்டவாளத்தில் படுத்திருந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

சாரதிப் பயிற்சிப் பாடசாலை உரிமையாளர்களுக்கு ஆளுநரின் புதிய உத்தரவு!!

வடக்கு மாகாணத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சாரதிப் பயிற்சி பெறுபவர்களுக்கு செயன்முறை பயிற்சியை இரவில் கட்டாயம் வழங்கவேண்டும் என்று மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வலியுறுத்தினார். வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் ஆளுநருக்கும் இடையேயான சந்திப்பு கடந்த 23ஆம் திகதி ஆளுநர் செயலகத்தில்... Read more »

என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை செப்ரெம்பர் மாதம் யாழில்!!

நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை செப்ரெம்பர் மாதம் யாழில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நிதி அமைச்சினால் இரண்டாவது என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை நேற்று முன்தினம் அநுராதபுரத்தில் இடம்பெற்றது . இதன்போதே யாழில் இடம்பெறுவதற்கான அறிவித்தலும் விடப்பட்டதாக... Read more »

1000 விகாரைகள் அமைக்க 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கிய கூட்டமைப்பினர்!! – டக்ளஸ்

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் வடகிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என முன்மொழியப்பட்டிருந்தபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கி அதற்கு ஆதரவு வழங்கியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமான நாடாளுமன்ற... Read more »

யாழ் காவற்துறை திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

யாழ் காவற்துறை திணைக்களத்தின் கணக்குக் கிளையில் பிரதான எழுதுவினைஞராகக் கடமையற்றும் 35 வயதுடைய ஜெகநாத குருக்கள் கிருபாலினி என்ற குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை தம்பசிட்டி கதிவேற்பிள்ளை வாசிகசாலை வீதியைச் சேர்ந்த இவர் அப்பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து கைகள், கால்கள்... Read more »

சொந்த மகளைச் சீரழித்த தந்தை தலைமறைவு ; தேடுதல் வேட்டையில் பொலிஸார்!!

13 வயதுச் சிறுமியான தனது மகளை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை தலைமறைவாகியுள்ளதாக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சிறுமி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சிப் பொலிஸாரால் இந்த அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பரந்தன் சிவபுரத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி... Read more »

மதவாச்சியில் கோர விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு ஐவர் படுகாயம்!

மதவாச்சி – அனுராதபுரம் பிரதான வீதியின் வஹமளுகொள்ளேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(திங்கட்கிழமை) அதிகாலை குறித்த விபத்து... Read more »

வவுனியாவிலிருந்து நீர்கொழும்புக்கு சென்றனர் ஒரு தொகுதி அகதிகள்!

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர், நீர்கொழும்பிற்குச் சென்றுள்ளனர். சுயவிருப்பத்தின் பேரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவும் அதற்கு முன்தினமும் 6 பேர் இவ்வாறு நீர்கொழும்பிற்குச் சென்றுள்ளனர். அதற்கமைய நேற்று முந்தினம் ஐவரும் நேற்று இரவு ஒருவரும் சென்றுள்ளதாகவும் மேலும்... Read more »

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு செவ்வாயன்று சிறப்பு விடுமுறை!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா நாளான வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தலை சகல பாடசாலை அதிபர்களுக்கும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் வழங்கியுள்ளார்.... Read more »

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியானது

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டுள்ளது. 2018 – 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வெட்டுப்புள்ளியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக தாம் தெரிவாகியுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அறிந்துகொள்ள... Read more »

பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும் – வடக்கு பட்டதாரிகள் கோரிக்கை!

அரசாங்கம், பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளில் அரச நியமனம் வழங்கப்படாத... Read more »

தையிட்டி பகுதியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடிவு!

யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் கூறியுள்ளார். விகாரை அமைப்பு தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,... Read more »