ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வருகிறது

ரயில்வே ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நண்பகல் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் தொடருந்து சேவைகள் இன்று திங்கட்கிழமை மாலை முதல் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே இயந்திர இயக்குனர்கள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் கடந்த 12 நாள்களாக தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor