இலங்கை பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் அதிகரித்து செல்கின்றது!

இலங்கை பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் அதிகரித்து செல்வதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வருடாந்தம் 3000 முதல் 3500 வரையான புதிய மார்பக புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25 வருடங்களில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய தரவுகளின்படி, மார்பக புற்றுநோய் இலங்கை பெண்கள் மத்தியில் சாதாரணமாக மாறி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தைரோய்ட் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டாமிடத்தில் உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் நான்கில் ஒரு வீதத்தினர் மார்பகப்புற்றுநோயாலேயே பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய் கண்டறியப்படும் கட்டத்தை பொறுத்தே, அவரை காப்பாற்ற முடியுமா என்பதை தீர்மானிக்க முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

துரதிஷ்டவசமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆபத்தான கட்டத்திலேயே மருத்துவ சிகிச்சைக்காக வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிய பெண்களில் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

Recommended For You

About the Author: Editor