வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்தை “மின் தகனம்” பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய கலந்துரையாடல் நாளைமறுதினம் (ஒக்.6) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகிறது.
வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயான அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை மூளாய் வீதி ஸ்ரீகணேசா வாசிகசாலையில் இடம்பெறவுள்ளது.
குழுவின் உப தலைவர் க.ராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தில் வலி.மேற்கு பிரதேச சபையின் தலைவர் த.நடனேந்திரன் பிரதம அதிதியாகவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிறப்பு அதிதியாகவும் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில் வழுக்கையாறு இந்து மயானத்தில் மின் தகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், மயான எல்லை நிர்ணயம், மயான கட்டண அறவீடு உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்படும் என அபிவிருத்திக் குழுவின் செயலாளர் இ.கு.சிவஞானம் அறிவித்துள்ளார்.
புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.