250 முஸ்லிம் குடும்பங்களைக் குடியமர்த்த யாழ்ப்பாணத்தில் இரட்டைத் தொடர்மாடி – அமைச்சரவை ஒப்புதல்

யாழ்ப்பாணத்தில் காணியற்றவர்களாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 250 முஸ்லிம் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக இரட்டைத் தொடர்மாடிகளை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தனியார் ஒருவரால் புதிய மூர் வீதியில் அமைந்துள்ள காணி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அதிலேயே இந்த இரட்டை தொடர்மாடிகளைக் கொண்ட 250 குடியிருப்புகளை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்டகாலமாக உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்த மற்றும் காணி அற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள 535 குடும்பங்களில் 250 குடும்பங்களுக்கு நன்கொடையாளர்களினால் வழங்கப்பட்டுள்ள 7.5 ஏக்கர் அளவிலான காணியைக் கொண்ட யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் இல 88 கிராம உத்தியோகத்தர் பிரிவில் புதிய மூர் வீதி வண்ணார்பண்ணையில் அமைந்துள்ள இராசாலி குளன்கரை என்ற தனியார் காணியில் (Twin) இரட்டை மாடி வீடமைப்பு கட்டடத் தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளது.

ஒரு வீடு 600 அடி சுற்றளவைக் கொண்டளவில் 250 வீட்டலகுகளைக் கொண்டதாக நிர்மாணிப்பதற்காக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Recommended For You

About the Author: Editor