புதிய தேர்தல் கூட்டணி – மைத்திரியை சந்தித்தார் சஜித்!

புதிய தேர்தல் கூட்டணி ஒன்றினை அமைத்துக் கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்றிரவு(செவ்வாய்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

புதிய தேர்தல் கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து பேச வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கமைவாகவே நேற்றிரவு குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தவர் ஒருவர் ஆதவனிடம் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹஷீம், பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor