தமிழர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என சஜித் நினைப்பது தன்னைதானே ஏமாற்றிக் கொள்ளும் செயல் – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என சஜித் பிரேமதாச நினைப்பது தன்னைதானே ஏமாற்றிக் கொள்ளும் செயலுக்கு ஒப்பானது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளிக்கும் வகையில் விக்னேஸ்வரண் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மையான சிங்கள வாக்குகளை பெறுவது உறுதி என தெரிவித்துள்ள அவர், தமிழர்கள் வாக்களிக்காமல் விட்டால் கட்டாயம் அவர் வெற்றிப்பெறுவார் எனவும் கூறியுள்ளார்.

அவ்வாறு கோட்டாபய வென்றால் தமிழர்களுக்கு பழைய நிலையே ஏற்படும் எனவும் சஜித் தமிழர்களுக்கு எதனை செய்ய விளைகின்றார் என்பதை தெளிவாக கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தமிழர்களுக்கு எதிராக கோட்டபய ராஜபக்ஷ செயற்படமாட்டர் என எண்ண தோன்றுவதாக தெரிவித்துள்ள அவர், கோட்டா சீன சார்பானவர் எனவும் ஆகவே இந்தியாவும், அமெரிக்காவும் அவர் ஜனாதிபதியாக தெரிவாவதை விரும்பமாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

கோட்டாபயவுக்கு அமெரிக்காவுடன் கள்ள உறவு இருப்பதாக கூறபடுவதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறான ஒரு கள்ள உறவு இருந்தால் அது தமிழ் மக்களுக்கு நன்மையாகவே அமையும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor