யாழ். பல்கலை ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை – ஹக்கீம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை என நீர்வழங்கல் நகர திட்டமிடல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றம் கூடியது.

இதன்போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு புதிதாக ஆட்சேர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கொள்கைக்கு தானும் உடன் படுகின்றேன் என்றும் அதனடிப்படையிலே இந்த பெயர் பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor