வடக்கு கிழக்கு இணைந்தாலே தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் – சுரேஷ்

வடக்கு கிழக்கு இணைந்து ஒரு மாகாணமாக ஆக்கப்பட்டாலேயே தமிழ் மக்களின் இந்த மண்ணில் பாதுகாக்கப்படுவார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “வடக்கு கிழக்கு இணைந்தது என்பது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. ஆகவே அந்த இணைப்பு என்பது ஒருதலைபட்ச்சமாக தற்போது மறுதலிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த இணைப்பு கொண்டுவர வேண்டிய முக்கிய பங்கு இந்திய அரசாங்கத்திடம் நிச்சம் காணப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பாக இந்திய அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை. எனவே சர்வதேச சமூகத்தின் உறுதியான பங்களிப்பு நிச்சயம் அவசியம்” என கூறினார்.

Recommended For You

About the Author: Editor