வவுனியா வைத்தியசாலைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் – பொலிஸார் தீவிர தேடுதல்!!

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வவுனியா பொலிஸாருக்கு இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு மோப்பநாய் சகிதம் சென்ற வவுனியா பொலிஸார், தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள், பொதுமக்கள் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் இந்த தேடுதலின்போது, வெடிபொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை கடற்படையினரால் வவுனியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்று நாளையதினம் ஆளுநரது பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor