பொது அமைப்புக்களுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!!

எழுக தமிழ் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

போர்க்குற்ற விசாரணையை நடாத்து, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய், வடக்கு- கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் 16.09.2019 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் எழுக தமிழ் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் எழுக தமிழ் பேரணிக்கு வலு சேர்க்கும் முகமாக நாளை (சனிக்கிழமை) காலை 9.00 மணியளவில் வவுனியா வாடி வீட்டில் பொது அமைப்புக்களின் உடனான சந்திப்பை, தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவ கட்சிகளும் ஏற்பாடு செய்துள்ளன.

Recommended For You

About the Author: Editor