கோதுமை மாவின் விலை அதிகரிப்புடன் பாண் விலையும் கூடியது

கோதுமை மாவின் விலையை இன்று முதல் பிறிமா நிறுவனம் அதிகரித்துள்ளது. இதன்படி கோதுமை மாவின் ஒரு கிலோவின் விலை 5.50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த அதிகரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாண் விலையை 2 ரூபாயினால் அதிகரிக்கவுள்ளதாக அனைத்து இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாணின் விலையை மாத்திரம் அதிகரிக்க முடிவுசெய்துள்ள போதும் ஏனைய வெதுப்பக உணவுப் பொருட்களில் மாற்றம் எதுவும் மேற்கொள்ள தீர்மானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor