வரதராஜ பெருமாளுக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்!

வவுனியாவில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளுக்கு எதிராக காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என வவுனுயாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வரதராஜப்பெருமாள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் கடந்த 930ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்தனர்.

வரதராஜ பெருமாளின் முகம் பதிக்கப்பட்டு சித்திரிக்கப்பட்ட படத்தை தாங்கியவாறு விளக்குமாற்றால் அடித்து சாணத்தை கரைத்து ஊற்றியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியங்களின் கொடிகளுடன் ‘தமிழர் இரத்தம் குடித்த ஒட்டுக்குழு வரதர்’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதை ஒன்றினையும் தாங்கியிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor