கிளிநொச்சியில் ATM இயந்திரத்தை உடைத்து திருட முயற்சித்த 6 போ் கைது!

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் உள்ள வங்கி இயந்திரத்தில் களவாட முற்பட்ட 6 பேர் நேற்றைய தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியில் இலங்கை வங்கிக்கு சொந்தமான தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தை உடைத்து களவாட முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறித்த 6 பேரும் நேற்றைய தினம் முழங்காவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இயந்திரப் பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு குறித்த 6 பேரும் வந்து நீண்ட நேரம் இயந்திரத்தை உடைக்க முற்பட்ட நிலையில் இறுதியில் முயற்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளனர். இருப்பினும் இயந்திரத்தை உடைக்க முயன்றமை வங்கியில் ஒளிப்படம் ஆகியிருக்கிறது. இவ்வாறு பதிவாகிய புகைப்படங்களின் உதவியுடன் குறித்த 6 பேரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரதேச சபை ஒன்றின் ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் மேற்படி செயலானது குறித்த ஆறுபேரின் உச்சக் கட்ட மதுபோதையின் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor