இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்கள் மீளத் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்ரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்கள் இந்து மாயனத்தில் புதைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றின் உத்தரவில் அவை நேற்று தோண்டி எடுக்கப்பட்டன.

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் உடல் பாகங்கள் நீதிமன்ற உத்தரவை அடுத்து பொலிஸாரால் மட்டக்களப்பு, கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டன.

பொலிஸாரின் இந்தச் செயலுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து தொடர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

மட்டக்களப்பு, கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட தற்கொலைக் குண்டுதாரியின் தலை மற்றும் உடல் பாகங்களை நேற்று செப்ரெம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் பயங்ரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்கள் இந்து மாயனத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன.

நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய அவை மீண்டும் பொருத்தமான இடத்தில் புதைக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor