மருத்துவர் சிவரூபனின் தகவலின் மூலம் ஆறு பேர் கைது!

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவர் சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில், இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

“சின்னமணி டனீஸ்வரன், இரத்தினம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னத்துரை, விநாயகமூர்த்தி நிஜிலன் ஆகிய நால்வரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று ரி. நிர்மலராஜ், ரூபன் ஜேசுதாசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டு, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களிடம் விசாரணை நடத்த கொழும்பில் இருந்து அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் வந்துள்ளது” என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Recommended For You

About the Author: Editor