புத்தக திருவிழா யாழில் ஆரம்பம்!

யாழ் புத்தகத் திருவிழா 2019’ யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த புத்தக திருவிழா இடம்பெற்று வருகிறது.

யாழில் முதன்முறையாக மிகப்பிரமாண்டமாய் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் புத்தகக்கண்காட்சி எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி வரை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

30 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள குறித்த புத்தக கண்காட்சி மண்டபத்தின் ஒவ்வொரு பிரிவிலும் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள், வழிகாட்டி நூல்கள், ஈழத்துப்படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளூர் மற்றும் இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ். ஆயர், வடக்கு மாகாண அரச அதிகாரிகள், புத்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள், இராணுவ அதிகாரிகள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor