பளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது!!

பளை வைத்திய சாலை வைத்திய அதிகாரி, வைத்தியர் எஸ். சிவரூபனுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி பளை வைத்திய சாலை வைத்திய அதிகாரி வைத்தியர் சி.சிவரூபனை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வைத்தியரை பயங்கரவாத தடுப்பு பிரிவனர் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வைத்தியருடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மூவரை நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் யாழில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor