இராணுவத்தளபதி நியமனத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி!

இராணுவத்தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

“லெப்டினன்ட் ஜெனரல் ஜெனரல் சில்வாவின் பதவி உயர்வு, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை கடுமையாக கேள்விக்குள்ளாக்குகிறது” என பச்லெட் தெரிவித்துள்ளார்.

“இந்த நியமனத்தால் நான் மிகவும் கவலையடைகிறேன். போரின்போது அவரும் அவரது துருப்புக்களும் எதிரான சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை கடுமையாக மீறியதாக கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், இந்த நியமனம் வழங்கப்பட்டது கவலையளிக்கிறது” என்று பச்லெட் கூறினார்.

புதிய இராணுவத்தளபதியின் நியமனத்திற்கு அமெரிக்காவும் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor