சாவகச்சேரியில் சடலம் மீட்பு!! பொலிஸார் விசாரணை

சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று (15) மீட்டுள்ளனர்.

சாவகச்சேரி – தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சாரம் மற்றும் சேர்ட் ஆகியன கழற்றப்பட்ட நிலையில் உள்ளாடையுடன் சிறிய பூவரச மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்ட நிலையில், அவர் அந்த பகுதியை சேர்ந்தவர் அல்ல என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வேறிடத்தில் இருந்து வந்து அங்கு அவர் உயிரை மாய்த்தாரா அல்லது, கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor