வடக்கு நெல்சிப் திட்ட ஊழல் குற்றச்சாட்டில் பொறியியலாளர் கைது

வடக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற நெல்சிப் திட்ட மோசடிகள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தால்  ஆரம்ப விசாரணைகள் மேற்கொெள்ளப்பட்டு  சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு பாரப்படுத்தப்பட்ட விடயம் சம்மந்தப்பட்ட பிரிவு பொலிஸ் அத்தியட்சகர்களிடம் கையளிக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு பணிக்கப்பட்டது.

இவ்வாறு பணிக்கப்பட்டு பாரப்படுத்தப்பட்ட கோவைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை , கிளிநொச்சி , வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்கு உட்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் அத்தியட்சகர்களிடம் பாரப்படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் இடம்பெறும் விசாணைக்காக தற்போது  நெல்சிப் திட்ட ஊழல் குற்றச்சாட்டில் சந்தகத்தின் பேரில் பொறியியலாளர் சச்சிதானந்தன் ஸ்ரெயிலாதரன் வவுனியா பொலிசாரால் கடந்த 05ம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை 15ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webadmin