‘வடக்கு வட்ட மேசை’ கலந்துரையாடலில் “வடமாகாணத்தின் உற்பத்தியும் சந்தையும்”!!

வடக்கு வட்டமேசை (Northern Province Round Table) கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (08) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெற்றது.

கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இடம்பெறும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் “வடமாகாணத்தின் உற்பத்தியும் சந்தையும்” தொடர்பில் இம்முறை கலந்துரையாடப்பட்டது.

மாதம் இருமுறை இடம்பெறும் இந்த ‘வடக்கு வட்ட மேசை’ கலந்துரையாடலில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளமுடியும் என்பதுடன் இதில் கலந்துரையாட பொருத்தமான தலைப்புக்கள் தொடர்பிலும் தெரிவிக்க முடியும்.

'????????????? ???????????? ?????????' ???? ????????? ???? ???? ?????????? ????? (08) ???? 4.00 ??????? ????????? #??????_???????? ?????????????#NPRT

Posted by Northern Province Round Table on Thursday, August 8, 2019

 

Recommended For You

About the Author: Editor