காய்சலுக்காக பயண்படுத்தும் மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

தற்போதைய சூழ்நிலையில் காய்சலுக்காக அஸ்பிரின் மற்றும் பிற ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஸ்ரிறொயிட் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காற்று காலநிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சில டெங்குக் காய்ச்சல் நோயாளர்கள் குறிப்பிட்ட சில வகை மருந்துகளை உட்கொண்டதினால் அவர்களது உடல்நிலை மோசமடைந்துள்ளதுடன், அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே, காய்ச்சல் ஏற்பட்டுள்ளவர்கள், அஸ்பிரின், புருபன், டைக்கிலோபெனாக், சோடியம், மெபனமிக் அசிட் மற்றும் இந்த வகையினைச் சேர்ந்த ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் ஸ்ரிரொயிட் வகையினைச் சேர்ந்த மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

அத்துடன், காய்ச்சலுக்காக தாங்கள் பயன்படுத்தும் மருந்துகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor