பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனத்தால் மாணவி மரணம்?

முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

றோமன் கத்தேலிக்க பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த 12 வயதுடைய இ. லிந்துசியா (சீனு) என்ற மாணவி கடந்த மாதம் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி சம்பவ தினத்தன்று பாடசாலை சென்ற வேளை 12.30 மணியளவில் இழுப்பு (சுவாசநோய்) நோயால் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். எனினும் பிற்பகல் 2 மணிக்கே முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மாணவியை அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவி உயிரிழந்துள்ளார்.

பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனமே மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் எனவும் மாணவி சுகயீனமடைந்த நேரமே வைத்தியசாலையில் அனுமதித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு பொலிஸாருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பணித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor