கிளிநொச்சியில் தாயும் மகனும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தாயும், மகனும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று (30) செவ்வாய்க்கிழமை காலையில் அவர்களது இருவரும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

70 வயதான தாயும், 34 வயதுடைய மகனின் சடலமுமே வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன.

கூரிய ஆயுதத்தால் அவர்கள் வெட்டப்பட்டு, குருதி வெள்ளத்தில் சடலங்களாக காணப்பட்டனர். அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor