என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை செப்ரெம்பர் மாதம் யாழில்!!

நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை செப்ரெம்பர் மாதம் யாழில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

நிதி அமைச்சினால் இரண்டாவது என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை நேற்று முன்தினம் அநுராதபுரத்தில் இடம்பெற்றது . இதன்போதே யாழில் இடம்பெறுவதற்கான அறிவித்தலும் விடப்பட்டதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

இதேநேரம் குறித்த நடமாடும் சேவை இடம்பெறும் மாவட்டத்திடம் அதற்கான அடையாள சின்னம் கையளிப்பது வழமை அதற்கமைய அடுத்த நடமாடும் சேவையின் சின்னம் நேற்று ( நேற்று முன்தினம் ) அநுராதபுரத்தில் வைத்து எம்மிடம் கையளிக்கப்பட்டது. இதன் முலம் குறித்த திட்டத்தின் மூலமாக மேற்கொள்ளும் அனைத்து திட்டத்தின் நன்மைகளையும் உடனடியாகவே குறித்த இடத்தில் இருந்து பொற்றுக்கொள்ள முடியும்.

இதன்போது நிதி அமைச்சிற்கு உட்பட்ட திணைக்களங்களும் அதனோடு இணைந்த அதிகாரிகளும் கலந்துகொள்வதோடு அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இருப்பினும் இதுவரையில் இடம் தேர்வு செய்யப்படவில்லை. விரைவில் இடம் தேர்வு செய்யப்படும். என்றார். –

Recommended For You

About the Author: Editor