மதவாச்சியில் கோர விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு ஐவர் படுகாயம்!

மதவாச்சி – அனுராதபுரம் பிரதான வீதியின் வஹமளுகொள்ளேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(திங்கட்கிழமை) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் பலத்த காயமடைந்த நிலையில், மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 53, 30 மற்றும் 12 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஏனையவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor