மட்டு. மாவட்ட தமிழ் மக்கள் கூட்டணிபணிமனையை செயலாளர் நாயகம்சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்!

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மாவட்டபணிமனையை தமிழ் மக்கள் கூட்டணியின்செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்அவர்களால் இன்று திங்கட் கிழமைவைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இல.57/1, சோமசுந்தரம் சதுக்கம், மாமாங்கம்மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ளதமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மட்டக்களப்புமாவட்ட பணிமனை இன்று திங்கட் கிழமைநண்பகல் 12.30 மணியளவில் செயலாளர்நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால்வைபவ ரீதியாக திறந்து வைத்து மாவட்டபணிமனை பெயர் பலகையையும்திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றிருந்த இந்நிகழ்வில் நிர்வாக இணைஉப செயலாளரும் மட்டக்களப்பு மாவட்டஅமைப்பாளருமான எஸ்.சோமசுந்தரம்பொருளாளரும் பொருளாதாரவிவகாரங்களுக்கான உப செயலாளருமானபேராசிரியர் வி.பி.சிவநாதன்நிர்வாக இணைஉப செயலாளர் .ஆலாலசுந்தரம்சட்டவிவகாரங்களுக்கான உப செயலாளர் திருமதிரூபா சுரேந்திரன்மகளிர் அணி உப செயலாளர்திருமதி இளவேந்தி நிர்மலராஜ்ஊடகம் மற்றும்செயற்றிட் ஆக்கங்களுக்கான உப செயலாளர்.சிற்பரன்தொகுதி அமைப்பாளர்இரா.மயூதரன்இளைஞர் அணி அமைப்பாளர்கே.கிருஸ்ணமீனன்வவுனியா மாவட்டஅமைப்பாளர் செ.சிறீதரன்கிளிநொச்சிமாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல்கணக்காளர் ராஜா துரைசிங்கம் மற்றும் ஊடகஉதவியாளர் சதீஸ் ஆகியோர்பங்கேற்றிருந்தார்கள்.

மட்டுமாவட்ட பணிமனைக்கு அண்மையாகஅமர்ந்திருந்து அருளாசிகளைவழங்கிக்கொண்டிருக்கும் மாமாங்கேசுவரப்பிள்ளையார் ஆலயத்தின் கொடியேற்றதிருவிழாவிற்கு சென்று ழிபாட்டினைமேற்கொண்டதன் பின்னர் மாவட்டபணிமனையை திறந்து வைக்கப்பட்டிருந்ததுஅதனைத் தொடர்ந்து மாமாங்கம் பகுதிமக்களுடனான சந்திப்பும் இடம்பெற்றிருந்தது.

Recommended For You

About the Author: webadmin