நாயை கட்டிப்போட ரணிலுக்கு ஞானசாரர் எச்சரிக்கை

தயவுசெய்து எம்மிடம் கன்னத்தில் அறைவாங்குவதற்கு முன்னர் அந்த நாயை(இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க) கட்டிப் போடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொள்கின்றேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் 2500 வருடங்கள் மதப் போதனை செய்து வருகின்ற பௌத்த பிக்குகளுக்கு செய்ய முடியுமான உயர்ந்த பட்ச இழிவை ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவர் செய்துள்ளார் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

தற்பொழுது நாட்டில் கூக்குரல் இட்டுத் திரியும் 90 இற்கும் அதிகமான பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்பட்டவர்கள் எனவும் அதனால் மன அழுத்தங்களுக்கு உட்பட்டதனாலேயே இவ்வாறு தேரர்கள் குரோதத்துடன் காணப்படுவதாகவும் சமூக வலைத்தளத்தில் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே ஞானசார தேரர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை பௌத்த தேரர்கள் குறித்து தவறாக பேசிய இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, மகா சங்கத்தினரிடம் பொது மன்னிப்புக் கோருவதற்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்குவதாக சிங்கள அமைப்பின் பொதுச் செயலாளர் மடில்லே பஞ்ஞாலோக தேரர் தெரிவித்துள்ளார்.
ரஞ்ஜன் ராமநாயக்க மீது பொலிஸில் முறைப்பாடொன்றை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவு செய்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் கூக்குரல் இட்டுத் திரியும் 90 இற்கும் அதிகமான பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்பட்டவர்கள் எனவும் அதனால் மன அழுத்தங்களுக்கு உட்பட்டதனாலேயே இவ்வாறு தேரர்கள் குரோதத்துடன் காணப்படுவதாகவும் சமூக வலைத்தளத்தில் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறதொரு கருத்தை முன்வைத்தமைக்காகவே ரஞ்ஜன் ராமநாயக்கவை மன்னிப்புக் கோருமாறு பௌத்த தேரர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webadmin