தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு

தமிழ்த் தேசிய அரசியலில் சூழலியம் என்ற கோட்பாட்டையும் உள்வாங்கிப் புதியதோர் அரசியல் கட்சியாகப் பரிணாமித்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தனது முதலாவது தேசிய மாநாட்டை நாளை 06.07.2019(சனிக்கிழமை) அன்று நடாத்துகிறது.

இம்மாநாடு அன்றைய தினம் மாலை 3.00 மணியிலிருந்து 6.00 மணிவரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் திரு. பொ. ஐங்கரநேசன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் தமிழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான கௌரவ நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் உறுப்பினர்கள் மாத்திரம் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத்தலைவர் கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம் அவர்களும், அரசியல் ஆய்வாளர் திரு. நிலாந்தன் அவர்களும், மன்னார் மாவட்டப் பொது அமைப்புகளின் ஒன்றியத்தலைவர் திரு. வி.எஸ். சிவகரன் அவர்களும் சிறப்புரையாற்ற உள்ளனர்.

Recommended For You

About the Author: webadmin