தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழப்பு!

கடந்த 14 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பொரளை, வனாத்துவில்லு சிறிசரஉயன வீட்டுத் தொகுதியை சேர்ந்த முத்தையா சகாதேவன் (62) என்ற தமிழ் அரசியல் கைதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கடந்த 2005ம் ஆண்டு குறித்த தமிழ் அரசியல் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் இரண்டு வாரங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இந்தநிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor