சிறிதரன் மற்றும் விஜயகலாவிற்கு எதிராக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!!

கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அடிப்படைத் தகுதியுள்ள பணியிலிருக்கும் தம்மை தகுதி கோரப்படாத பதவியிலிருப்போர் தகுதியில்லை என கூறுவதாக குற்றம் சாட்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் பொது மக்கள் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தகுதியில்லாதவர்கள் என பேசியிருந்தமையினை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்த குறித்த கண்டன ஆர்ப்பாட்டமானது, இன்று கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக காலை பத்து மணிக்கு ஆரம்பமானது.

பின்னர் பேரணியாக மாவட்டச் செயலகம் வரை சென்றடைந்த போராட்டக்காரர்கள் அங்கு மாவட்ட அரச அதிபருக்கான மகஜரை, மேலதிக மாவட்ட அரச அதிபர் எஸ் சத்தியசீலனிடம் கையளித்தனர்.

அத்துடன் குறித்த, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘கௌரவ சிறிதரன், அவர்களே, கௌரவ விஜயகலா அவர்களே எங்கள் மீதான உங்கள் பொய்களை நிறுத்துங்கள்’ ‘எங்கள் வேலைக்கு அடிப்படைத் தகுதியுண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தவிர, தகுதிகான காலத்தை பெற்றும் தகுதியில்லை என கூறுவது நியாயமா?”கல்வி இராஜாங்க அமைச்சரே! நாடாளுமன்ற உறுப்பினரே தகுதியில்லை என கூறுவதற்கு என்ன ஆதாரம் உண்டு?’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

மேலும் குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோ கததர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே, சங்கத்தின் பொருளாலாளர் கிளிநொச்சி சமுர்த்தி சங்க தலைவர் சங்கர், மன்னார் சமுர்த்தி சங்கத்தின் செயலலாளர் கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor