தனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை!!

யாழ்.புங்கன்குளம் பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையா்கள் வாள் முனையில் மூதாட்டியை அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனா்.

இந்த சம்பவம் இன்ற அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடா்பாக அயலவா்கள் கூறுகையில், பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்கின்றனா். இந்நிலையில் மூதாட்டி தனிமையில் வாழ்ந்துவந்தாா்.

ஓய்வு பெற்ற அரச ஊழியரான குறித்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வாளை காட்டி மூதாட்டியை அச்சுறுத்தியதுடன், மூதாட்டியின் வாய்க்குள் துணியை அடைந்து பணம், நகை மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனா்.

கதவுகளை உடைத்தும், கூரையை பிாித்தும் இரு வழிகளால் கொள்ளையா்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனா். இந்நிலையில் இன்று காலையே குறித்த மூதாட்டி வீட்டில் கொள்ளை நடந்தது தொியவந்தது. இதனையடுத்து வாய்க்குள் துணிஅடையப்பட்ட நிலையில்

மூச்சுவிட சிரமப்பட்ட மூதாட்டியை மீட்டு வைத்தியசாலையில் சோ்த்ததுடன், சம்பவம் தொடா்பாக பொலிஸாருக்கு தொியப்படுத்தியுள்ளதாக அயவலா்கள் கூறினா். தற்போது பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்.

குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இதற்கு முன்னரும் சில தடவைகள் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அயலவா்கள் கூறுகின்றனா்.

Recommended For You

About the Author: Editor