1,050 பாடசாலைகளில் Wi-Fi வலயம் அமைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை!!

நாட்டிலுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைக்கு அருகலை வலயம் (Wi-Fi Zones) அமைக்கும் பணி அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

“உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு மடிகணினி (laptop) வழங்கப்படவுள்ளது. அதனால் அவர்கள் பாடசாலை வளாகத்துக்குள் இலவசமாக இணையத்தைப் பயன்படுத்துவதற்கான வசதியும் கல்வி அமைச்சால் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய முதல்கட்டமாக ஆயிரத்து ஐம்பது பாடசாலைகளுக்கு அருகலை வலயம் (Wi-Fi Zones) அமைக்கும் பணி அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும். அதற்கான உடன்படிக்கை சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளது” என்று கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor