நாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க இடமளிக்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

நாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க இடமளிக்க முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு -கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டபின்னர் 185 ஆவது வருடாந்த திருநாள் திருப்பலி இம்முறை கொடியேற்றம், திருச்சொரூபப்பவனி என்பன இடம்பெறாமல் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நேற்று(வியாழக்கிழமை) ஒப்புக்கொடுப்பட்டது.

இதன்போதே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னர் கிறிஸ்தவ மக்கள் எத்தகைய வன்முறை செயல்களிலும் ஈடுபடவில்லை.

தொடர்ந்தும் முஸ்லிம் மக்களை பாதுகாத்தே வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், நாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க இடமளிக்க முடியாது.

ஆகவே இத்தகையதொரு நிலையில், நாட்டு மக்களின் மத்தியில் நல்லிணக்கமும், சாந்தியும் சமாதானமும் உருவாக வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor