நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடச்செய்ய சிலர் முயற்சி!

நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுக்கும் சில பிரிவுகளின் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையிலநேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முஸ்லிம் உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு மாதத்துக்குள் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும் எனவும் இதற்கு அமைச்சு பதவிகள் தடையாக இருக்க கூடாது என்பதனால் தாம் இந்த முடிவினை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

அத்தோடு முஸ்லிம் அரசியல்வாதிகள் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தீவிரவாத நடவடிக்கைகளை முஸ்லிம் சமூகம் எப்போதுமே நிராகரிக்கும் என தெரிவித்த அவர் நாட்டில் உறுதியை பேண தொடர்ச்சியான விசாரணைக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பாக தெரிவித்தார்.

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி இன்று தமது அமைச்சு, பிரதி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்ததாக 9 முஸ்லிம் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

அத்தோடு தொடர்ந்தும் பின்வரிசையில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor