யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளைமுதல் புதிய நடைமுறை!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாசி மாதம் 14 ஆம் திகதி பிரதமர் ரணி்ல் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (Accident and emergency unit with modern facilities) நாளை சனிக்கிழமை தொடக்கம் பொதுமக்களுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்கவுள்ளது.

எனவே விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக வருபவர்கள் நாளை புதிதாக திறந்து வைக்கப்பட்ட சிகிச்சைப் பிரிவு கட்டத் தொகுதிக்குரிய புதிய நுழைவாயிலூடாக வருமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்கள் அறிவித்துள்ளார்.

வெளிநோயாளர் பிரிவில் வெள்ளிக்கிழமை மாத்திரம் தொடர்ந்தும் பழைய வெளிநோயாளர் பிரிவுக் கட்டத்தில் இயங்கும் என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor