தாக்குதல் சம்பவங்கள் – கைது செய்யப்பட்டவர்களில் 20 பேருக்கு நேரடி தொடர்பு

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த 20 பேரிடமும் தற்போது விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைதானவர்களிடம் பெறப்படும் தகவல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்கள் காரணமாக 250இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்த நிலையில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து முப்படையினரும் இணைந்து நாடு முழுவதிலும் மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளில் தாக்குதல்களுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் அன்றாடம் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

தாக்குதல்களுடன் தொட்ர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரையில் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor