குண்டு வெடிப்பு சத்தத்தால் மூளாய் பகுதியில் பதட்டம்!

யாழ்.மூளாய் பகுதியில் நேற்று மாலை 6.00 மணிக்கு இரண்டு பாரிய குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. அதனுடன் அப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளது.

அதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்கு வெளியே வந்து வீதியில் கூடி அது தொடர்பில் ஆராய்ந்த போது,மீண்டும் ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது.

அதனை தொடர்ந்து மூளாய் பித்தனை சுடலை பகுதியில் இருந்து பெரும் புகை எழும்பியது.

அதேவேளை அப்பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று நின்றதனை மக்கள் அவதானித்துள்ளனர்.அதனால் இராணுவத்தினர் குண்டினை செயழிலக்க செய்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் ஊகித்தனர்.

இராணுவத்தின் குண்டு செயழிலக்க செய்யும் பிரிவினர் வழமையாக கல்லுண்டாய் வெளி பகுதியிலையே குண்டுகளை செயலிழக்க செய்வார்கள். தற்போது அப்பகுதியில் வீட்டு திட்டம் வழங்கப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதனால்,மூளாய் பித்தனை சுடலை பகுதியில் குண்டுகளை செயழிலக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor