குண்டுத் தாக்குதல்: சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டு உதவி கோரியுள்ளது பொலிஸ்

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டு, மக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

ஈஸ்ட்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் அதன் அடுத்த நாள் கொழும்பு, கொச்சக்கடை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றும் வெடித்து சிதறியது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களையே பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர்.

ஆகையால் குறித்த சந்தேகநபர்களை இனங்காண்பதற்கு மக்கள் உதவ வேண்டுமென கோரி, அவர்களின் ஒளிப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor