யாழிலிருந்து பயணித்த ரயிலுடன் மோதி பேருந்து விபத்து

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவால் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு சிறியரக பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன், கச்சாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த சிறியரக பயணிகளை ஏற்றும் பேருந்து ரயில் கடவையை கடக்க முற்பட்டபோது மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது குறித்த பேருந்து மோசமாக சேதமடைந்துள்ளது. பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பேருந்து சேவையை ஆரம்பிபதற்காக தரிப்பிடத்தை நோக்கி செல்லும் போதே இடம் விபத்து இடம்பெற்றதாகவும் அதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சேர்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor