மேலதிக நாட்களில் பாடசாலை நடத்தப்படமாட்டாது!

நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2 வார கால கல்வி நடவடிக்கைகளுக்கு பதிலாக வேறு நாட்களில் பாடசாலை நடத்தப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இரண்டாம் தவணைக்கான கற்றல் மற்றும் பரீட்சை செயற்பாடுகள் வழமைப் போன்று சாதாரண முறையில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரால் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் அனைத்து பாடவிதானங்களும் உள்ளடங்கும் வகையில் நேர அட்டவணையில் திருத்தங்கள் செய்யவும், மாணவர்களின் வரவில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் வழமை போன்று கல்வி நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 22ம் திகதி ஆரம்பமாக இருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக இம்மாதம் 06ம் திகதியே பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor