வாள்கள், இராணுவச் சீருடைகள் இருப்பின் இரண்டு நாட்களுக்குள் ஒப்படையுங்கள்!!

வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவச் சீருடைகள் உடமையில் வைத்திருந்தால் இன்று அல்லது நாளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர்.

நாடுமுழுவதும் தற்போது முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புத் தேடுதலில் போது வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவச் சீருடைகள் என்பன கைப்பற்றப்படுகின்றன.

அவற்றை வைத்திருப்போர் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுத்துவைக்கப்படுகின்றனர்.

இதனால் அவற்றையில் உடமையில் வைத்திருப்போர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதன் மூலம் மேற்படி குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவர் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor