சகல வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல்!

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டும் பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு யாழ் வணிகர் கழகம் கேட்டுக்கொள்கின்றது.

  1. உங்கள் வர்த்தக ஸ்தாபனத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் வைத்திருத்தல் வேண்டும்.
  2. உங்கள் வர்த்தக ஸ்தாபனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் சகல விபரங்களும் பேணப்பட வேண்டும்.
  3. உங்கள் வர்த்தக ஸ்தாபனங்களில் அறிமுகமில்லாதவர்களை வேலைக்கு அமர்த்துவதையும், தங்குவதற்கு இடமளிப்பதையும் தவிர்த்து கொள்ள வேண்டும்.
  4. உங்கள் வர்த்தக ஸ்தாபனத்திற்கு வருபவர்கள் மீது அவதானமாக இருத்தல் வேண்டும்.
  5. உங்களது கடைகளுக்கு வெளிப்புறமாக பொருட்களைக் காட்சிப் படுத்துவதை தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
  6. தங்களது வர்த்தக ஸ்தாபனத்துக்கு முன்னால் நிறுத்தப்படும் வாகனங்கள் தொடர்பில் அவதானமாக இருத்தல் வேண்டும்.

தங்கள் வர்த்தக ஸ்தாபனங்களிலோ, அல்லது அதற்கு முன்னாலோ ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில் நீங்கள் பொறுப்பாளியாவதை தவிர்ப்பதற்காக இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

யாழ் வணிகர் கழகம்.

Recommended For You

About the Author: Editor